ஷூட்டிங்கின் போது கார் விபத்தில் சிக்கிய சமந்தா.. மருத்துவமனையில் அனுமதி – கதறும் ரசிகர்கள்!

0
ஷூட்டிங்கின் போது கார் விபத்தில் சிக்கிய சமந்தா.. மருத்துவமனையில் அனுமதி - கதறும் ரசிகர்கள்!

சமந்தா தற்போது விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து குஷி என்னும் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். திரைப்பட ஷூட்டிங்கின் போது இருவரும் கார் விபத்து ஒன்றில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கார் விபத்து:

சமந்தா நடிப்பில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் சமீபத்தில் தான் வெளியானது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து சமந்தா விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து குஷி என்னும் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். குஷி திரைப்படம் டிசம்பர் மாதம் திரைக்கு வரும் என படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர். மேலும், இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. குஷி திரைப்படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று கொண்டிருந்தது.

ஆக்ஷன் காட்சி ஒன்றை சமந்தா மற்றும் விஜய் தேவர்கொண்டாவை வைத்து படமாக்கி கொண்டிருந்தனர். அப்போது சமந்தா, விஜய் தேவர்கொண்டா இருவரும் சென்ற கார் எதிர்பாராத விதமாக ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் சமந்தா மற்றும் விஜய் தேவராகொண்டா இருவருமே காயம் அடைந்தனர். இருவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். இருவருக்கும் முதுகு தண்டில் தான் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் பிசியோதெரபி சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here