‘ஓ சொல்றியா’ சமந்தாவுக்கே டஃப் கொடுத்த பிரபல நடிகை – வெளியான விடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

0

தற்போது சமந்தா ஆடிய ஓ சொல்றியா பாடல் மிக பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த கவர்ச்சி நடனத்தையே மிஞ்சும் அளவுக்கு தற்போது நடிகை ரெஜினா ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ரெஜினாவின் கவர்ச்சி நடனம்

தற்போது வெளியான புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள, நடிகை சமந்தா நடனமாடிய ஓ சொல்றியா பாடல் ஓன்று படு ஹிட் ஆனது. அந்த பாடல் வரிகள் அனைத்தும் ஆண்களை இழிவுபடுத்துவது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்த பாடலுக்கு ஆரம்பத்தில் இருந்தே கடுமையான எதிர்ப்புகள் வந்த நிலையிலே இருந்தன.

ஆனாலும் இந்த பாடலின் வரிகளை உச்சரிக்காத ஆளே இருக்க முடியாது. அந்த அளவுக்கு அனைவரின் மனதிலும் இந்த பாடல் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலுக்கு சமந்தா படு கவர்ச்சியாக நடனமாடியுள்ளார். அந்த கவர்ச்சி நடனத்தையே மிஞ்சும் அளவுக்கு தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

சிரஞ்சீவி, ராம்சரண், பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால் ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படம் தான் ”ஆச்சர்யா”. இந்த திரைப்படத்தில் கண்ட நாள் முதல் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான ரெஜினா ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடி இருக்கிறார். புஷ்பா திரைப்படத்தின் வெற்றிக்கு முழுக்க முழுக்க சமந்தா நடமாடிய பாடலே காரணம். அதே போல இந்த பாடலும் திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமந்தாவையே ரெஜினா மிஞ்சி விட்டார் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here