என்னது.., சமந்தா அரசியலில் குதிக்கப் போகிறாரா? என்னடா சொல்றீங்க? அப்ப சினிமா?

0

சினிமாவில் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பல ஹிட் படங்களை கொடுத்து தற்போது பான் இந்திய நடிகையாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. கடைசியாக இவர் நடித்த குஷி திரைப்படம் கடந்த செப் 1ம் தேதி திரையரங்கில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து சமந்தா இப்பொழுது மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

சிகிச்சை முடிந்த கையோடு நடிகை சமந்தா சினிமாவில் இருந்து விலகி அரசியலில் களமிறங்க போவதாக திரையுலகில் பரவலாக பேச்சு வார்த்தைகள் போய் கொண்டிருக்கிறது. அதுவும் அவர் பி ஆர் எஸ் கட்சி சார்பில் சமந்தா தேர்தலில் பிரசாரம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here