நயன்தாராவை ஓவர்டேக் செய்த சமந்தா… தி பேமிலி மேன் 2 தொடரில் நடிக்க இவ்ளோ சம்பளமா???

0

தி பேமிலி மேன் 2 என்ற வெப் சீரிஸ் தமிழ் இனத்திற்கு எதிரானது என பல தரப்பினரும் எதிர்த்து வந்தனர். மேலும் இது எதையும் கண்டுக்காமல் அந்த  வெப் சீரிஸ் நடித்தவர் சமந்தா. இதற்கென அவருக்கு சம்பளமாக இதுவரை  10 கோடி வரை வழங்கப்பட்டு உள்ளது. இது லேடி சூப்பர் ஸ்டார் சம்பளத்தை விட அதிகமாகும்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சமந்தா நடிப்பில் வெளிவந்த தி பேமிலி மேன் 2 என்ற வெப் சீரிஸ் தமிழினத்திற்கு எதிரானதாக நடித்தாக பல எதிர்ப்புகளை சந்திக்க நேரிட்டது. இதனை எதிர்த்து  அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் தொண்டு ஆர்வலர்கள் பல அறிக்கைகளையும் வெளியிட்டனர். மேலும் இந்த வெப் சீரிஸில் நடித்த சமந்தா இவ்வளவு சர்ச்சையை சந்தித்தாலும், தமிழின மக்களின் உணர்வுகளை உள்வாங்கி தான் நடித்ததாகவும் ஈழத்தமிழர்கள் எந்த விதத்திலும் அவமதிக்கவில்லை என்று பதிலளித்துள்ளார்.

 

மேலும் இந்த படத்தில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, சமந்தா போன்ற பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இந்த வெப் சிரிஸில் 9 எபிசோட் கிட்டத்தட்ட வெளியாகியுள்ளன. ஆனால் இந்த  வெப் சீரிஸ் 2-வில் வெறும் 9 எபிசோடுகளில் நடிப்பதற்கு மட்டும் சமந்தா 10 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளார். ஒரு படத்தில் நடிக்க சமந்தா பெரும் அதிகபட்ச சம்பளம் 1.5 முதல் 2 கோடி வரை இருக்கும். ஆனால் இந்த வெப் சீரிஸில் அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் டாப் நடிகையாக உள்ள நயன்தாரா வாங்கும் 7 கோடியை தாண்டி உள்ளது.

இதனால் தான் காஜல் அகர்வால், தமன்னா, வாணி போஜன் போன்ற முன்னணி நடிகைகள் வெப் சீரிஸில் நடிப்பதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சம்பளத்திற்காக வரலாறு தெரியாமல் நடித்து விட்டு தமிழ் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி விட்டாரே சமந்தா.

Facebook   =>Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here