தி பேமிலி மேன்  எதிரொலி; “இனி தமிழ்நாட்டு குள்ள வரக்கூடாது” – சமந்தாவை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்!!!

0

தி பேமிலி மேன் சீஸன் இரண்டில் தமிழ்ப் போராளிகள் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருப்பது போன்று காட்சிகள் உள்ளன. நாளைக்கு (ஜூன் 4) ரீலிஸ் ஆகும் நிலையில், சமந்தாவை எதிர்த்து #ShameOnYouSamantha என்ற Hash Tag மூலம் சமந்தாவுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

சமந்தாவை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்:

தமிழ்ப் போராளி போன்று சீருடை அணிந்திருக்கும் சமந்தா, எல்லோரையும் சாகக் கொல்வேன் என்று பேசும் வசனமும் சீஸன் 2 ட்ரெய்லரில் இடம்பெற்றிருந்தது. தமிழர்களையும், தமிழ்ப் போராளிகளையும் தவறாக சித்தரித்திருப்பதாகக் கூறி தி பேமிலி மேன் 2-க்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது.

இதனை தொடர்ந்து, இலங்கை தமிழர்களுக்காக போராடிய LTTE-யை தவறாக சித்தரித்து உள்ளதாகவும், இந்த டிரைலரில் இடம் பெற்ற வசனங்கள் ஐஎஸ்ஐ தீவிரவாதிகளுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக வசனம் இடம் பெற்றுள்ளது.

இதற்கு உலகளவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதுமட்டுமல்லாமல் #ShameOnYouSamantha என்ற Hash Tag செய்து தமிழகர்கள் சமந்தாவை எச்சரித்த வண்ணம் உள்ளனர். சமூக வலைத்தளத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த பிரச்சினை முடிவுக்கு வருமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here