காட்டுத்தனமான கவர்ச்சியில் களமிறங்கிய சமந்தா – திக்குமுக்காடிய இணையதளம்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா அக்கினேனி. இவருக்கு 2 வருடங்களுக்கு முன்பே திருமணம் ஆன நிலையிலும் தற்போது வரை இளைஞர்கள் மனதில் கனவு கன்னியாகவே இருக்கிறார். மேலும் தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார்.

சமந்தா

திரையுலகில் நடித்து வரும் நடிகை, நடிகர்கள் பலரும் காதலித்து திருமணம் செய்து கொள்வதுண்டு. அப்படி திருமணம் செய்து கொண்டவர்கள் பலரும் சிறந்த ஜோடியாகவே மக்கள் மத்தியில் பதிந்துள்ளனர். தமிழில் சூர்யா-ஜோதிகா, அஜித்-ஷாலினி என தற்போது வரை போற்றப்படும் ஜோடிகள் இருந்து வருகின்றனர்.

அந்த சினி உலகில் போன வருடம் திருமணம் செய்து கொண்ட ஜோடி தான் நாகசைதன்யா-சமந்தா. தெலுங்கில் முதல் படமே சமந்தாவிற்கு நாகசைதன்யா உடன் தான். அப்படி ஆரம்பித்த இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது.

பீட்டர் பால் நம்பரை இன்னும் வச்சிருக்கியா?? வனிதாவிடம் சரமாரியான கேள்விகளை கேட்ட உமாரியாஸ்!!

இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என இருந்தனர். இருவீட்டாரிடம் எதிர்ப்பு இருக்க தான் செய்துள்ளது. ஆனால் இருவரும் பேசி புரியவைத்து பிறகு பெற்றோர்கள் சம்மதத்துடன் கோவாவில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு பெரும்பாலும் நடிகைகளுக்கு வாய்ப்புகள் குறைய தான் செய்யும்.

இதனாலேயே மார்க்கெட் போனபிறகு தான் நடிகைகள் திருமணம் செய்து கொள்வர். ஆனால் சமந்தாவிற்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரிக்க தான் செய்தார்கள். திருமணத்திற்கு பிறகும் சமந்தா தனது கேரியரில் கவனத்தை தவறவிடாமல் இருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வந்தார். அந்த படங்களும் தொடர்ந்து ஹிட் அடிக்கவே தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நிலைத்து உள்ளார்.  மேலும் லாக்டவுன் சமயத்தில் இருந்து தொடர்ந்து புகைப்படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வந்தார்.

அதிலும் சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். சில காலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்தார்.  தற்போதும் அதே போல் இதுவரையிலும் இல்லாத விதமாக ஒரு காட்டுத்தனமான கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here