சமந்தாவுக்கு தைரியம் ஜாஸ்தி தான்.. பிரதமர் மோடி குறித்து அவரே கூறிய கருத்து – சமூகவலைத்தளங்களில் வைரல்!

0
சமந்தாவுக்கு தைரியம் ஜாஸ்தி தான்.. பிரதமர் மோடி குறித்து அவரே கூறிய கருத்து - சமூகவலைத்தளங்களில் வைரல்!

இந்திய சினிமாவில் ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வருபவர் சமந்தா. இவர் தற்போது நம் நாட்டின் பிரதமர் மோடி பற்றி பேசியுள்ளார்.

நடிகை சமந்தா:

தமிழ் தாண்டி பல்வேறு திரைத்துறையில் பணியாற்றி தனக்கென தனி இடம் பிடித்துள்ளவர் சமந்தா. இவர் தற்போது ஆங்கிலத்தில் கூட படங்களில் நடிக்க தொடங்கி விட்டார். ஹாலிவுட் சினிமாவில் Arrangements of love என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் நடித்து குஷி, யசோதா, சகுந்தலம் ஆகிய பல படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி குறித்து தெரிவித்த கருத்துக்கள் வைரலாகி வருகிறது. அதாவது அவர் ஒரு பேட்டியில் பேசும் பொழுது, தான் எப்பொழுதுமே மோடி ஜி அவர்களின் ஆதரவாளர் என கூறியுள்ளார். மேலும் அவரின் செயல்பாடுகள் தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதே போன்று மற்றொரு பேட்டியிலும் மோடியை பற்றி பேசியுள்ள சமந்தா, அவர் தலைமையில் நாடு பல்வேறு மாற்றங்களை சந்தித்துள்ளதாக கூறியிருப்பதோடு, அவர் பொருளாதாரம் உள்ளிட்ட விஷயங்களில் நாட்டை முன்னோக்கி நகர்த்திச் செல்வார் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். சமந்தா இவ்வாறு வெளிப்படையாக பேசியுள்ளது பலரின் பாராட்டை பெற்றாலும் சிலர் அதை விமர்சித்தும் வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here