இதுல எதுப்பா நம்ம சம்மு?? விதவிதமான கவர்ச்சி உடையால் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்திய சமந்தா!!

0

முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தனது அனைத்து ஸ்டைல்களையும் முன்னிறுத்தி ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

சமந்தா அக்கினேனி

தமிழில் வெளியான மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தான் சமந்தா. மாடலிங் துறை மூலம் சினிமாவிற்கு வந்த இவர் தனது பல வருட போராட்டத்திற்கு பிறகு தான் நிலையான இடத்தை பிடித்திருந்தார். தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் முன்னணி நடிகையாகவே இருக்கிறார் நம்ம சம்மு.

samanthaa
samanthaa

ஆரம்பத்தில் சின்ன சின்ன படங்களில் நடித்திருந்தாலும் நாளடைவில் முன்னணி நடிகர்களுடன் மட்டுமே ஜோடி சேர்ந்து நடித்தார். மேலும் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இவர் தெலுங்கில் நடித்த பிருந்தாவனம் திரைப்படம் தான் இதற்கு காரணமே.

அந்த படம் மாஸ் ஹிட் அடிக்க இவரது மார்க்கெட்டும் எகிறியது. இந்நிலையில் தான் நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பள்ளி மனைவியாக நடித்து அனைவரையும் கவர்ந்திருப்பார். அவர் சினிமா துறையில் கால் பதித்து இதோடு 10 வருடங்கள் ஆகிறது.

இத்தனை நாட்கள் சப்போர்ட் செய்ததற்கு நன்றி என்று கண்கலங்கி வீடியோ வெளியிட்டிருந்தார். தெலுங்கு நடிகையாக மட்டும் இல்லாமல் மருமகளாகவும் ஆகினார். அதாவது தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

samantha

ஆனால் எக்காரணத்தை கொண்டும் அவர் தமிழை மட்டும் மறந்ததே கிடையாது. ஏனெனில் தமிழில் அவ்வளவு சரளமாக பேசுபவர் தான் நம்ம சம்மு. மேலும் இன்ஸ்டாவில் எப்பொழுதுமே ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது பல வித ஆடைகளை அணிந்து ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by S (@samantharuthprabhuoffl)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here