டாப் ஆங்கிளில் கும்முனு போஸ் கொடுத்த சமந்தா – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

0

தென்னிந்திய திரைஉலகில் நயன்தாராவிற்கு பிறகு மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் என்றால் அது சமந்தா அக்கினேனி தான். லாக்டவுன் சமயத்தில் இருந்து தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமாகவே உள்ளார். தற்போதும் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

சமந்தா

சென்னை பெண்ணான சமந்தா அக்கினேனியின் அப்பா கேரளாவை சேர்ந்தவர். இவருக்கு தமிழ் பேசுவது என்றாலே மிகவும் பிடிக்குமாம். மேலும் சூர்யா நடித்த ‘காக்க காக்க’ திரைப்படம் சமந்தாவை மிகவும் கவர்ந்ததாம். இதுவரையிலும் சூர்யாவின் தீவிர ரசிகையாகவே உள்ளார் சமந்தா.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மாலத்தீவுக்கு சென்று வந்த சமந்தா சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்தை பார்த்து புகழ்ந்து தள்ளியிருந்தார். மேலும் சூர்யாவுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் மிகவும் மகிழ்ச்சியடைந்தாராம். இப்பொழுது வரை தமிழ், தெலுங்கு என பிஸியாகவே உள்ளார் சமந்தா.

சமூக வலைத்தளங்களில் சமந்தா கர்ப்பமாக இருப்பதாக கூட செய்திகள் வெளியாகின. அதற்கும் சமந்தா தக்க பதிலடி கொடுத்தார். சமந்தா வெளியிடும் புகைப்படங்களை பார்த்த பலரும் சமந்தாவை திட்டி தான் வருகின்றனர். ஒரு ரசிகர் எல்லாம் எல்லை மீறி ‘சமந்தாவை விவாகரத்து செய்யுங்கள் நாகசைதன்யா’ என்றெல்லாம் கமன்ட் செய்தனர்.

KPY செட்டில் பயங்கர மேக்கப்பில் வனிதா வெளியிட்ட புகைப்படம்!!

ஆனால் சமந்தாவோ எந்த பதட்டமும் இல்லாமல் அது நடக்காத காரியம் நீங்க வேணும்னா நாகசைதன்யா கிட்ட பேசி பாருங்களேன் என்று கூலாக பதில் சொன்னார். சமந்தாவிற்கு 30 வயதிற்கு மேல் ஆகியும் இதுவரையிலும் அழகாகவே காட்சியளிக்கிறார். பலரும் கமெண்டில் உங்கள் அழகிற்கு காரணம் என்ன என்றே கேட்டு வந்தனர்.

அந்த ரசிகர்களுக்கும் சமந்தா பதிலளிக்க தான் செய்தார். உடற்பயிற்சி, யோகா போன்றவற்றால் தனது மனதையும் ரிலாக்ஸ் ஆக வைத்துக் கொள்வாராம் சமந்தா. அதுவே அவர் சிரிப்பிற்கும் காரணமாக இருக்கிறது என்று இதிலிருந்தே தெரிகிறது. தெலுங்கில் ஒரு நிகழ்ச்சியை வேறு தொகுத்து வழங்கி வருகிறார்.

அதில் முதலாவதாக கலந்துகொண்டது ராணா தான். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது சமந்தாவையே கண்கலங்க வைத்தது. இவ்வாறு தொடர்ந்து பிஸியாகவே இருந்து வரும் சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்திலும் புகைப்படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி தான் வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here