வெள்ளை நிற சேலையில் ரசிகர்களை திக்குமுக்காட வைத்த சமந்தா – வைரலாகும் புகைப்படம்!!

0

வெள்ளை நிறத்தில் சேலை அணிந்து ரசிகர்கள் கண் குளிரும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ளார் நடிகை சமந்தா. வலைதளபக்கத்தில் வெளியாகியுள்ள அவரது புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

நடிகை சமந்தா

சினிமாவில் குறைந்த நாளிலேயே உச்சகட்ட புகழை எட்டியவர் நடிகை சமந்தா. ஆரம்ப சினிமா வாழ்க்கையில் சில இடங்களில் சறுக்கல்கள் இருந்தாலும், சில நாட்களிலேயே தன் உயரத்தை எட்டிப்பிடிக்க ஆரம்பித்து விட்டார் சமந்தா. தமிழ் பெண்ணான இவருக்கு சினிமாவின் தாய்வீடு என்றால் அது ஹைதராபாத் தான்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஏனென்றால் தமிழ் ரசிகர்கள் இவரை ஏற்றுக்கொள்ளும் முன்னதாகவே தெலுங்கு சினிமாவில் ஒரு முக்கிய புள்ளியாகியிருந்தார் சமந்தா. இதுவரை தமிழ் திரைப்படங்களை விட அதிகமான தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர். அதனால் தான் என்னவோ ஹைதராபாத் மருமகள் ஆகிவிட்டார் சமந்தா.

தமிழில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற திரைப்படத்தில் இரண்டாவது நாயகியாக, கெஸ்ட் ரோலில் நடித்த சமந்தா, இத்திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதையின் நாயகியாக நடித்திருப்பார். சினிமாவில் பிரபலமான கொஞ்ச வருடங்களிலேயே பல முன்னனி நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ளார் சமந்தா.

காப்பி கன்டன்ட்னாலும் ஒரு நியாயம் வேணாமா?? விஜய் டிவியுடன் போட்டி போடும் சன் டிவி!!

விஜய், சூர்யா, விக்ரம், அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் இவர். சினிமாவில் உயரத்தில் இருந்தபோது தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னும் தற்போது திரைப்படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா.

வலைதளப்பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சமந்தா அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் வெள்ளை நிற சேலையில் கண்ணை கவரும் வகையில் இவர் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களால் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here