செப்டம்பர் 1 ஆம் தேதி திரைக்கு வரும் ‘குஷி’….,கொண்டாட்டத்தில் சமந்தா ரசிகர்கள்…,

0
செப்டம்பர் 1 ஆம் தேதி திரைக்கு வரும் 'குஷி'....,கொண்டாட்டத்தில் சமந்தா ரசிகர்கள்...,
செப்டம்பர் 1 ஆம் தேதி திரைக்கு வரும் 'குஷி'....,கொண்டாட்டத்தில் சமந்தா ரசிகர்கள்...,

நடிகை சமந்தா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘குஷி’ திரைப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குஷி படம் ரிலீஸ்

ஷிவா நிர்வானா இயக்கத்தில் நடிகை சமந்தா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள திரைப்படம் ‘குஷி’. தெலுங்கு மொழியில் தயாராகும் இந்த திரைப்படம் ரொமான்டிக் காமெடியை மையமாக கொண்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கப்பட்ட ‘குஷி’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

‘சீதாராமன்’ சீரியல் நடிகை பிரியங்கா திடீர் திருமணம்….,இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே….,

அந்த வகையில், ‘குஷி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் கிட்டத்தட்ட முடிவை எட்டியுள்ள நிலையில், அதன் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘குஷி’ திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதியன்று திரைக்கு வர உள்ளது. இது, நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகை சமந்தா நடிக்கும் காதல் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் எக்கச்சக்க ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here