இராணுவ உடையில் ரகளையாக குத்தாட்டம் போடும் சமந்தா…!அவரே வெளியிட்ட வீடியோ!!!

0

தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பரிச்சயமானவர் நடிகை சமந்தா. அவ்வப்போது இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவை. அந்த வகையில் தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் போர் வீரர்கள் அணியும் உடை அணிந்து ஒரு பாடலுக்கு செம ஆட்டம் போட்டு உள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

மாடலாகியாக தனது பயணத்தை தொடங்கியவர் நடிகை சமந்தா. தமிழில் காதல் காவியமாக சிம்பு மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான படம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் அறிமுகமானார். அதன் பிறகு இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் படமான  ‘ஏ மாய சேசாவே’ என்ற படத்தில் ஒரு கதாநாயகியாக திரைக்குள் நுழைந்தார். இதனை அடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில்  படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு திரையில் முன்னணி நடிகராக விளங்கும்  நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய நடிப்பை தொடர்ந்தார். மேலும் இவர் வெப்சீரிஸில் களம் கண்டு உள்ளனர். இந்நிலையில் அவர் நடித்த தி பேமிலி மேன் என்ற  வெப்சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றதோடு பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து அதன் இரண்டாம் பாகம் உருவாகி கொண்டுவருகிறது. அதன் படப்பிடிப்பில் உயிர் காக்கும் போர் படை வீரர்கள் அணியும் ராணுவ உடையில் ஒரு பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு உள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here