குழந்தை பெற்றுக் கொள்ள தயாராக இருந்த சமந்தா!! – ஆதங்கத்தை கொட்டி தீர்த்த தயாரிப்பாளர்!

0

நடிகை சமந்தா இன்னும் சில நாட்களில் குழந்தை பெற்றுக் கொள்ள தயாராக இருந்ததாகவும், தற்போது ஏன் இந்த விவாகரத்து முடிவை எடுத்தார் என தெரியவில்லை என தயாரிப்பாளர் ஒருவர் ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.

ஆதங்கப்பட்ட தயாரிப்பாளர்:

நடிகை சமந்தாவும், தெலுங்கு பிரபலம் நாக சைதன்யாவும் அண்மையில் மனதார விவாகரத்து பெற்று பிரிந்து வாழ போவதாக அறிவித்தனர். இந்த நிலையில், தற்போது சமந்தாவை சகுந்தலம் என்ற வரலாற்று படத்தில் நடிக்க வைப்பதற்கு தயாரிப்பாளர் நீலிமா மற்றும் அவரது தந்தை உள்ளிட்டோர் சமந்தாவை சந்தித்துள்ளனர்.

ஆனால், இந்த ஆண்டு இறுதியில் தாம்  குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக படத்தை சீக்கிரம் முடிக்க முடியுமா என்று தன்னிடம் பேசியதாக தெரிவித்தார். ஆனால், இது வரலாற்று படம் என்பதால் அவ்வளவு சீக்கிரம் இதனை முடிக்க முடியாது என தயாரிப்பாளர் மறுத்ததை அடுத்து இந்த படத்தில் நடிக்க தயங்கினார்.  இத்தகைய முடிவில் இருந்தவர் ஏன் விவாகரத்து வாங்கினார் என தெரியவில்லை என நீலிமா புலம்பியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here