சமந்தாவின் விவகாரத்தை தொடர்ந்து முன்னாள் காதலர் போட்ட ட்விட்.. அப்போ அதுதான் காரணமோ?

0
samantha and naga saithanya
samantha and naga saithanya

டோலிவுட்டின் காதல் தம்பதிகளாக வலம் வந்தவர்கள் சமந்தா, நாக சைதன்யா. 2017 ஆம் ஆண்டு நடந்த இவர்களது திருமணம் சென்ற ஆண்டு வரை எவ்வித சச்சரவும் இல்லாமல் சென்றது. ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட பிரிவு காரணமாக இருவரும் விவாகரத்து செய்ய்யபோவதாக நேற்று அறிவித்தனர்.

இது தமிழ், தெலுங்கு ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் சமந்தாவின் முன்னாள் காதலர் சித்தார்த் ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அது சமந்தாவை தான் அவர் மறைமுகமாக சாடுகிறாரோ என்ற சந்தேகத்தை அனைவருக்கும் ஏற்படுத்தியுள்ளது.

அதாவது அவர் போட்ட ட்விட்டில், “என் ஆசிரியரிடம் நான் ஒன்று கற்றுக்கொண்டேன். மற்றவர்களை ஏமாற்றுபவர்கள் முன்னேறவே மாட்டார்கள்” என்று பதிவிட்டுள்ளார். அதுவும் சமந்தா தன் விவகாரத்தை அறிவித்த நேற்றைய தினமே பதிவிட்டுள்ளார். இது சமந்தா மீது தான் சித்தார்த் குற்றம் சுமத்துகிறாரோ என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here