சமந்தா நாக சைதன்யா விவகாரம்… சந்தேகத்தை எழுப்பிய மணக்கோல புகைப்படம்!!!

0

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் மணக்கோலத்தில் இருக்கிறார்.

நாளுக்கு நாள் கிளாமரில் பட்டையை கிளப்பும் சமந்தா - வெறியான இணையவாசிகள்!!

தமிழ் சினிமாவில் ஒரு துணை நடிகையாக களம் இறங்கிய சமந்தா அதன் பின்னர் தெலுங்கு திரைத்துறை மூலம் ஒரு முழு கதாநாயகியாக உருவெடுத்தார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்து வெவ்வேறு மொழி படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். 2010ஆம் ஆண்டு தனது திரை பயணத்தை தொடங்கிய இவர், வரிசையாக படங்களில் கதாநாயகியாக கமிட்டாகி நடித்து வந்தார்.

அட பாவமே.. சமந்தா வாழ்க்கைல இப்படி ஒரு பிரச்சனையா?? - எல்லாரும் சொன்னது உண்மை ஆகிடும் போலயே!!

மேலும் இவர் நடித்த ஒரு சில படங்கள் இவருக்கு அந்த அளவுக்கு வெற்றியை பெற்று தரவில்லை என்றாலும் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வந்தார். திரையில் இவரின் மார்க்கெட் பீக்கில் இருந்த போதே இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னரும் தனது நடிப்பை தொடர்ந்தார் சமந்தா. இந்நிலையில் சமீபகாலமாக இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிய போவதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கிறது. இதற்கு சமந்தா மற்றும்  நாக சைதன்யா தரப்பில் இருந்து எந்தவித பதிலும் வராத நிலையில், இவர்கள் இருவரும் தங்களின் செய்கைகள் மூலம் பதிலடி கொடுத்து வருகின்றனர். மேலும் ஒரு சில நாட்களுக்கு முன்பு சமந்தா  நாக சைதன்யாவுக்கு ட்விட்டர் மூலம் அவரின் புது படத்திற்கு வாழ்த்து கூறியிருந்தார்.

இந்த செய்தியும் இணையத்தில் தீயாய் பரவியது. இவ்வாறு தங்களின் விவாகரத்து குறித்து வரும் செய்திகளுக்கு இணையத்தில் மறைமுக பதில்களையே அளித்து வருகின்றனர் இந்த தம்பதி. இந்நிலையில் சமந்தா தான் மணக்கோலத்தில் இருக்கும் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் சந்தேகத்தை கிளப்பி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here