சமந்தா உடல்நிலை திடீர் மோசம்., மீண்டும் மருத்துவமனையில் அனுமதி! செய்தி தொடர்பாளர் விளக்கம்!!

0
சமந்தா உடல்நிலை திடீர் மோசம்., மீண்டும் மருத்துவமனையில் அனுமதி! செய்தி தொடர்பாளர் விளக்கம்!!
சமந்தா உடல்நிலை திடீர் மோசம்., மீண்டும் மருத்துவமனையில் அனுமதி! செய்தி தொடர்பாளர் விளக்கம்!!

உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக, வெளியான வதந்திகள் அனைத்தும் பொய்யானது என அவரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி :

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா, தற்போது அதிக சம்பளம் பெறும் நடிகைகளின் பட்டியலில் டாப் ரேஞ்சில் இருக்கிறார். இவர் குட்லக், யசோதா போன்ற படங்களில் தீவிரமாக நடித்து வந்தார். விவாகரத்துக்கு பின், அவரது சினிமா கேரியர் மிகவும் பிஸியாக போய்க்கொண்டிருந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த நிலையில் திடீரென இவருக்கு மையோசைட்டிஸ் எனும் தோல் சார்ந்த பிரச்சனை ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை எடுக்க வெளிநாட்டுக்கு சென்ற, சமந்தா அதிலிருந்து கொஞ்சம் மீண்டு வந்து மீண்டும், தன் பட வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இவர் நடித்து வந்த யசோதா படத்தின், பிரமோஷன் பணிகளிலும் பங்கேற்று வந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமல்., உடல்நலம் பற்றி வெளியான பரபரப்பு அறிக்கை!!

இந்த நிலையில் சமந்தாவின் உடல் நிலையில் மீண்டும் திடீரென பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தற்போது அவர், ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், சமந்தா தற்போது ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார் என்றும், அவர் குறித்து வெளியான அனைத்து தகவல்களும் வதந்தியே என்றும் அவரது செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார். இந்த செய்திகள் தற்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here