சமந்தாவின் அடுத்த பிளான் மூவியா?? வெப் சீரிஸா?? அவரே கொடுத்த விளக்கம்!!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா அவர்கள். தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது அவர் வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு வெப் தொடரில் நடிக்க உள்ளதாக வந்த தகவல்களை சமந்தா தரப்பு மறுத்து உள்ளது.

சமந்தா

நடிகை சமந்தா தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தமிழில் நடித்த பல படங்களில் இவரின் நடிப்பு திறமையை காணலாம். எல்லா வித பாவனைகளையும் வெளிப்படுத்தி இருப்பார். தன் அழகாலும் நடிப்பாலும் ரசிகர்கள் தன்வசப்படுத்துவதில் வல்லவர்.

திருமணத்திற்கு பிறகும் தனது திரைப்பயணத்தை தொடர்ந்தவர் நமது தெறி நாயகி. பின்னர் அம்மணிக்கு வெப் சீரிஸ் ஆசை வரவே அங்கும் தன் முத்திரையை பதித்தார். இந்நிலையில் தற்போது அவர் நடிப்பில் வெளியான ‘தி பேமிலி மேன் 2’ என்ற வெப் சீரிஸ் மிகுந்த வெற்றியை பெற்றது.

மேலும் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானது. ஆனால் அதற்காக அந்த நாயகிக்கு வழங்கப்பட்ட சம்பள எவ்ளோ தெரியுமா?? 10 கோடியாம். இந்த சம்பளமானது நமது லேடி சூப்பர் ஸ்டாருக்கு வழங்கப்படும் சம்பத்தை விட அதிகமாம். இவ்வாறு கோடிகளில் சம்பளம் கொட்டுவதால் தான் பல முன்னணி நடிகைகளும் தங்களை மெல்ல வெப் சீரிஸ் பக்கம் திருப்பி உள்ளனர்.

தற்போது நடிகை சமந்தா மேலும் ஒரு வெப் சீரிஸ்-யில் நடிக்க உள்ளதாகவும் அதற்கு அவருக்கு ரூ.8 கோடி சம்பளம் என பேசப்பட்டு உள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன.

இது குறித்து சமந்தா தரப்பு கூறுகையில், மீண்டும் அவர் வெப் சீரிஸ் நடிப்பதாக வெளியான தகவல்கள் பொய் எனவும், இவைகள் வெறும் வதந்திகள் மட்டுமே ஒரு துளி கூட உண்மை இல்லை என்றும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் அவர் திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்துவதாக கூறியுள்ளனர். தற்போது அவர் கைவசம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல், ‘சகுந்தலம்’ என்ற இரு படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here