சினிமாவில் தனது 11 வது வருடத்தை கொண்டாடும் சமந்தா – குவியும் வாழ்த்துக்கள்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா இதோடு திரையுலகில் அறிமுகமாகி 11 வருடங்கள் முடிவடைந்த நிலையில் தனக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்களுக்கு வாய்ப்பளித்தவர்களுக்கும் நன்றி கூறி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

சமந்தா

தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் கலக்கி வருபவர் சமந்தா அக்கினேனி. சென்னை பெண்ணான இவர் தமிழில் மாஸ்கோவில் காவிரி படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அவர் முதலில் நடித்தது தெலுங்கில் தான். தனது கணவருடன் சேர்ந்து நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கான ‘ஏ மாயா சேஸ்தாவ்’ படம் நடித்திருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த படம் 2010 ஆம் ஆண்டு வெளியானது. மாஸ்கோவில் காவேரி திரைப்படமும் 2010 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படங்கள் வெளிவந்து 11 வருடம் முடிந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். தமிழில் வெற்றிநடைபோட்ட சிம்பு நடித்த திரைப்படம் தான் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. இந்த படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

samantha
samantha

அதன் பிறகு தெலுங்கு ரீமேக்கிலும் நாகசைத்தன்யா உடன் நடித்திருந்தார். இந்த படத்தில் இருந்து தான் இருவருக்குமே காதல் வளர ஆரம்பித்துள்ளது. சமந்தா நாகசைதன்யா காதலிக்க ஆரம்பித்து இதோடு 11 வருடங்கள் ஆகிறது. தற்போது வரை இதே காதலுடன் தான் இருக்கிறார்கள்.

samantha wedding
samantha wedding

மேலும் திருமணம் ஆகியும் சமந்தாவிற்கு திரையுலகில் மார்க்கெட் குறையவும் இல்லை. முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். மேலும் மக்கள் மத்தியிலும் அவருக்கென்று ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. எப்பொழுதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் சம்மு தற்போது இந்த 11 வது வருடத்தை கொண்டாடும் விதமாக அனைவர்க்கும் நன்றி கூறியுள்ளார்.

குக் வித் கோமாளியில் வனிதாவையே கதறடித்த பாலா – வைரலாகும் ப்ரோமோ!!

அதாவது முதல் காதல் என்றுமே மறக்காது. தனக்கு வாய்ப்பு கொடுத்த கௌதம் வாசுதேவ் மேனனுக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் ‘ஏ மாயா சேஸ்தாவ் படத்தின் புகைப்படத்தையும் வெளியிட்டு வருகிறார். தற்போது அது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here