இனி இந்த தொழிலாளர்களுக்கு ரூ.5000 ஆண்டு நிவாரண நிதி – முதல்வர் ஸ்டாலின் முக்கிய உத்தரவு!

0
வெறும் ரூ.1000 முதலீட்டில் ஓய்வூதிய திட்டம் - பென்ஷன் காரர்களுக்கு அடித்த பம்பர் ஆஃபர்!!

கடலோர பகுதியில் உள்ள உப்பளங்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அமல்படுத்தியுள்ளது.

ஆண்டு நிவாரண நிதி:

தமிழகத்தில் சென்ற ஆண்டு ஆட்சியை பிடித்த திமுக அரசு பல நலத்திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் உள்ளது. தற்போது பெண்களுக்கான கட்டணமில்லா பிங்க் பேருந்து சேவையை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் 10 கடலோர மாவட்டங்களில் 43,174 ஏக்கர் நிலத்தில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மழை காலங்களில் தவிர மற்ற காலங்களில் உப்பு உற்பத்தி அதிகமாக இருக்கும்.

ஆனால் மழைக்காலங்களில் சேதமடைந்த உப்பளத்தினை திருத்த கிட்டத்தட்ட 6 வாரம் ஆகும் என கூறப்படுகிறது. அந்த சமயத்தில் இதில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியமே வழங்கப்படும். இதனால் அவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது கடலோர பகுதியில் உள்ள உப்பளங்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களின் வறுமையை போக்கும் விதமாக ஆண்டுக்கு ரூ 5000 நிவாரணம் நிதி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரும் விதமாக 5000 ரூபாய் காசோலையை  5 பேருக்கு வழங்கி உள்ளார். இந்த திட்டம் கடலோர பகுதியில் உள்ள உப்பளங்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here