ரீமேக் செய்யப்படும் மாஸ்டர் திரைப்படம் – கொண்டாடும் ரசிகர்கள்

0

தமிழில் வெளியாகி பெரும் வசூல் சாதனை செய்த மாஸ்டர் திரைப்படமானது தற்போது ஹிந்தியில் சல்மான் கான் நடிப்பில் ரீமேக் செய்யப்படுவதாக வந்த தகவலால் ரசிகர்கள் ஆனந்தத்தில் உள்ளனர்.

மாஸ்டர்:

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனான விஜய்க்கு தனி ரசிகர் பட்டாளம். விஜய் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டவர் அதுமட்டுமல்லாமல் அவரது படங்கள் பாக்ஸ் ஆபிஸில் எப்போதும் தோல்வி அடைந்தது இல்லை. இறுதியாக வெளியாகிய மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதோடு பாக்ஸ் ஆபீஸ் கலைக்சனையும் அள்ளியது.

பாலிவுட்டில் தனக்கென தனி கோட்டையை கட்டிவைத்திருப்பவர் தான் சல்மான் கான். இவர் ‘பீவி ஹோ தோ ஐசி’ என்னும் திரைப்படம் மூலம் அறிமுகமானவர். மேலும் இவர் ஹிந்தியில் நடித்த ‘பியார் கியா’ என்னும் திரைப்படம் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். பின்பு இவர் நடித்த அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் தான் என்றே சொல்லலாம்.

மேலும் இவரது படம் வசூலிலும் அவ்வப்போது புதிய சாதனையை செய்து வரும். தமிழில் வெற்றிகரமாக ஓடிய மாஸ்டர் திரைப்படம் தற்போது சல்மான் கான் அவர்களின் நடிப்பில் தற்போது ரீமேக் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here