பொங்கல் பண்டிகையின் போது சூடுபிடித்த மது விற்பனை.., ஒரே நாளில் அரசுக்கு இத்தன கோடி வருமானம்!!!

0
பொங்கல் பண்டிகையின் போது சூடுபிடித்த மது விற்பனை.., ஒரே நாளில் அரசுக்கு இத்தன கோடி வருமானம்!!!
பொங்கல் பண்டிகையின் போது சூடுபிடித்த மது விற்பனை.., ஒரே நாளில் அரசுக்கு இத்தன கோடி வருமானம்!!!

உலகெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளும் ஜனவரி 15, 16, 17ம் தேதிகளில் பாலமேடு. அவனியாபுரம், அலங்காநல்லூர் பகுதிகளில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் பெருநகரங்களில் தங்கி இருந்த லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு திரும்ப பல்வேறு சிறப்பு வசதிகளை தமிழக அரசு மேம்படுத்தியிருந்தது. மேலும் ஜனவரி 16ம் திருவள்ளுவர் தினத்தை போற்றும் விதமாக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர் இவர் தான்.., கடைசி நேரத்துல இப்படி பண்ணிடீங்களே!!

இந்நிலையில் “மது இல்லை என்றால் கொண்டாட்டங்கள் இல்லை” என கலாச்சாரம் மாறி வருவதால் தமிழ்நாடு முழுவதும் பொங்கலுக்கு முன்னதாகவே மது விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகையில் டாஸ்மாக் கடை மது விற்பனை ரூ.800 கோடியை தாண்டியுள்ளது என தகவல் வெளிவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here