அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பம்பர் ஆஃபர்., அகவிலைப்படி உயர்வோடு ஊதியமும் உயர்வு? வெளியான முக்கிய தகவல்!!!

0

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதம் அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. தற்போது இதைத்தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஜனவரி 1ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை முடக்கப்பட்ட நிலுவைத் தொகை இதுவரை மத்திய அரசு ஊழியர்களின் கணக்கில் செலுத்தப்படவில்லை.
எனவே 18 மாத நிலுவைத் தொகையை வழங்க ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்த நிலையில் தற்போது இதை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இத்துடன் ஃபிட்மெண்ட் காரணியும் அதிகரிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாம். இதனால் ஊழியர்களின் அடிப்படை சம்பளமும் உயரும். இதற்கான காரணம் என்னவென்றால் விரைவில் மக்களவைத் தேர்தல் நடக்க உள்ளதால் மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் நிலுவைத் தொகையை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here