இது சேலையா?? கண்ணாடியா?? அலைகளுக்கு மத்தியில் கவர்ச்சி கன்னியாக போஸ் கொடுத்த சாக்ஷி!!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மற்றும் இளசுகள் மத்தியில் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அதாவது கடற்கரையில் ஏடாகூட கவர்ச்சியில் அலைகளுக்கு மத்தியில் நடத்திய போட்டோ ஷூட் வீடியோவை பகிர்ந்து உள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி  வருகிறது.

சாக்ஷி அகர்வால் தனது வாழ்க்கை பயணத்தை ஒரு மாடலாக தொடங்கினார். அதன்  பின்னர் நூற்றுக்கணக்கான  விளம்பர படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பல மேடை நிகழ்ச்சியில் தன்னுடைய நடன திறமையால் அனைவரையும் மகிழ்வித்தார். மேலும் இவர் ராஜா ராணி, யோகன், ஆத்யன், காலா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார்.

இருப்பினும் இவர் விஜய் டிவியில் உலக நாயகன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தான் எக்கச்சக்க ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்து கொண்டார். மேலும் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு  தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார்.அந்த வகையில் தற்போது கடற்கரையில் போட்டோ ஷூட் நடத்திய வீடியோ ஒன்றை இணையத்தில் உலா விட்டு உள்ளார்.

ரவுடி பேபி வீட்டில் நடைபெற்ற திருமணம்… பாசத்தில் உருகிய குடும்பத்தினர்!!!

அதாவது கடற்கரையில் மிகவும் மெல்லிய நீல நிற கண்ணாடி சேலையில் போட்டோ ஷூட்  செய்து உள்ளார். மேலும் இந்த போட்டோஷூட்  வீடியோவில்  அலைகள் மத்தியில் ஒரு கவர்ச்சி கன்னியாக வலம் வருகிறார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் தாறுமாறான கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவுக்கு பல லைக்ஸ்களை வாரி வழங்கி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here