போலாமா குதிரை சவாரி.. செய்யலாமா செம கச்சேரி.. ரசிகர்களை உசுப்பேத்திய சாக்ஷி அகர்வால்!!!

0

வெள்ளித்திரையில் கலக்கி வரும் முன்னணி நடிகைகளுக்கு இணையாக போட்டோ ஷூட் செய்து அதை இணையத்தில் உலவ விட்டு வருபவர் சாக்ஷி. தற்போது அதே போன்று ஒரு வீடியோவை இணையத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் கந்தசாமி படத்தில் இடம் பெற்ற பாடலுக்கு நடனமாடி உள்ளார்.

விளம்பர படங்கள் மற்றும் மாடலிங் என தனது வாழ்க்கையை தொடங்கிய சாக்ஷிக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தனக்கு எப்படியும் திரையில் நல்ல ஒரு இடம் கிடைக்கும் என எண்ணிய இவர் ஏமாற்றத்தையே சந்தித்தார். அதாவது அவர் பங்கேற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுபெற்று கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாகியும் இவரால் திரையில் ஒரு நல்ல இடத்தை பிடிக்க முடியவில்லை.

மேலும் அதற்காக எவ்வளவு கவர்ச்சி காட்டினாலும் பட வாய்ப்பு என்பது எட்டாக்கனியாகவே இன்று வரை இருந்து வருகிறது. இருப்பினும் அவரை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது. அந்த அளவுக்கு இளசுகளின் மத்தியில் ஒரு கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மேலும் அவர்களை குஷிப்படுத்த அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் புகைப்படம் மற்றும் ரீல்ஸ் வீடியோ வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது சியான் விக்ரம் அவர்களின் கந்தசாமி படத்தில் இடம்பெற்ற என் பேரு மீனாகுமாரி… என்ற பாடலுக்கு படு கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டு ரசிகர்களை உசுப்பேத்தி உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here