Saturday, April 20, 2024

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி மறைவு!!

Must Read

கந்தசாமி (80) உடல் நலம் குன்றியதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு:

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 1940 இல் பிறந்தவர் கந்தசாமி. இவர் 1968 இல் எழுதிய சாயாவனம் என்ற நாவல் அவருக்கான தனி அடையாளத்தை எழுத்தாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

மேலும் இந்த நாவல் தேசிய புத்தக அறக்கட்டளை நவீன இந்திய இலக்கியங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு எழுத்தாளர் கந்தசாமி ‘விசாரணை கமிஷன்’ என்ற நாவலுக்காக சாகித்ய அகாதமி விருதை பெற்றார்.

கவிஞர் வைரமுத்து இரங்கல்

மறைந்தாரே சா.கந்தசாமி!
‘சாயாவனம்’ சாய்ந்துவிட்டதே!
தன்மானம் – தன்முனைப்பு
தனி அடையாளமென்று மெய்வெளியில் இயங்கிய கலைஞன் அல்லனோ!
சதை அழிவுறும்; அவர் கதை அழிவுறாது.
— வைரமுத்து

என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 lyricist Vairamuthu
lyricist Vairamuthu
பிரபலங்கள் இரங்கல்:

அவரின் மறைவிற்கு கலைத் துறையினர் மற்றும் எழுத்தாளர் சங்கத்தினர் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -