புரட்டாசி விரதம் இருக்குறவங்களா நீங்க?  – அப்போ உங்களுக்காகவே சைவ நெத்திலி மீன் குழம்பு!!

0

புரட்டாசி விரதம் இருப்பவர்களுக்கு மிக பெரிய வருத்தம் என்னவாக இருக்கும் என்றால் அந்த மாதம் முழுக்க அவர்களால் அசைவ உணவை சாப்பிட முடியாது. அவர்களுக்காவே வெறும் வாழைப்பூவை வைத்து சைவ நெத்திலி மீன் குழம்பு எவ்வாறு செய்வது என்று இந்த பதிவில் காண்போம். பெயருக்கு ஏற்றார் போல இதன் சுவையும் மீன் குழம்பு போன்று இருப்பதே இந்த டிஷ்ஷின் ஸ்பெஷல்.

தேவையான பொருட்கள்:

சுத்தம் செய்த வாழைப்பூ – தேவையான அளவு

சின்ன வெங்காயம் – 7

வெள்ளைப்பூண்டு – 4

மல்லித்தூள் – 1 டிஸ்பூன்

மிளகாய்த்தூள் -1 டிஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்

வெந்தயம் – சிறிது

சோம்பு – சிறிது

கடுகு, உளுத்தம் பருப்பு – சிறிது

கருவேப்பிலை – சிறிது

புளிக்கரைசல் – 1/2 கப்

பெருங்காயம் – சிறிது

எண்ணெய் – தே.அளவு

உப்பு – தே.அளவு

செய்முறை:

முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், சோம்பு போட்டு பொரிந்ததும் சின்ன வெங்காயம், பூண்டு, கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் ஆகும் வரை நன்கு வதக்கவும். பின்னர் மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும். பின்னர் புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.

மேலும் வாழைப்பூ, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். எண்ணெய் பிரிந்து வரும் வேளையில் கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து இறக்கவும். தற்போது வீடே மணக்கும் சைவ நெத்திலி மீன் குழம்பு தயார்

குறிப்பு – இதில் தேங்காய், சோம்பு, சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து ஊற்றியும் செய்யலாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here