அசைவ சுவையில் சைவ மட்டன் சுக்கா – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0
அசைவ சுவையில் சைவ மட்டன் சுக்கா - வீட்டுல செஞ்சு அசத்துங்க!!
அசைவ சுவையில் சைவ மட்டன் சுக்கா - வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

மட்டன் சுக்கா என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் அடிக்கடி மட்டன் சிலர் கொழுப்பு என்று கருதி உணவில் சேர்க்க மாட்டோம். எனவே அசைவ சுவையில் சைவ மட்டன் சுக்கா எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம்.

இதெல்லாம் மனித உரிமை மீறல் – வேதனையில் புலம்பிய மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!!

தேவையான பொருட்கள்:

ஊற வைத்த பாசிப்பயறு – 1 கப்

தேங்காய் துருவல்- 1/2 கப்

சீரகம் – 1/2 டீஸ்பூன்

நல்லெண்ணெய் – 1 டீஸ் ஸ்பூன்

மிளகு – 1/4 டீஸ் ஸ்பூன்

பெரிய வெங்காயம் – 2

பச்சை மிளகாய் – 2

மஞ்சள் பொடி – 1/2 டீஸ்பூன்

வெள்ளைப்பூண்டு – 10 முதல் 12

கறிவேப்பிலை – தே. அளவு

சோம்பு தூள் – 1/2 டீஸ்பூன்

மல்லி தூள் – 1/2 டீஸ்பூன்

மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 3/4 டீஸ்பூன்

உப்பு – தே. அளவு

செய்முறை:

தேங்காய் துருவல், பச்சை பயறு, உப்பு, சீரகம் சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும். பின்பு இந்த கலவையை இட்லி கொப்பரையில் வைத்து அவித்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது அதை கத்தியை வைத்து மட்டன் துண்டு அளவுக்கு வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

அசைவ சுவையில் சைவ மட்டன் சுக்கா - வீட்டுல செஞ்சு அசத்துங்க!!
அசைவ சுவையில் சைவ மட்டன் சுக்கா – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

பின்னர் கடாயில் நல்லெண்ணெய் விட்டு அதில் சீரகம், மிளகு, நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இடித்த வெள்ளை பூண்டு , மஞ்சள் தூள், கறிவேப்பிலை, சோம்பு தூள், மிளகு தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

இப்பொழுது வெட்டி வைத்த சைவ ஈரலை (பாசிப்பயறு கலவை) இதில் சேர்த்து நன்கு வதக்கவும். 5 நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைத்து கிண்டி அடுப்பை அணைக்கவும். இப்பொழுது சுவையான சைவ மட்டன் சுக்கா ரெடி.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here