நடிகர் பிரசன்னா படத்தில் சிறு வயதிலேயே நடித்துள்ள ரவுடி பேபி – எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

0

பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு முன்னணி நடிகையான சாய் பல்லவி சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருக்கிறார். தற்போது அதற்கான அரிய வகை புகைப்படம் இணையத்தில் கலக்கி வருகிறது.

சாய் பல்லவி:

மலையாள படமான பிரேமம் என்னும் படம் மூலம் தமிழ், தெலுங்கு மக்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் தான் சாய் பல்லவி. இந்த படம் இவரது கேரியரை வேற லெவலுக்கு உயர்த்தியது. இதன் மூலம் சினிமா துறையில்  காஸ்ட்லீ நடிகையாக அவதாரம் எடுத்தார். இதை அடுத்து தமிழிலும் அவர் சில படங்களில் நடித்தார். ஆனால் அவை பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

இதனால் அவர் தெலுங்கு சினிமாவில் நிரந்தரமாக இருந்து விட்டார். இவரது கியூட்டான நடிப்பு மற்றும் நடனம் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. தற்போது இவரை பற்றி ஓர் அரிய தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இவர் தனது குழந்தை பருவத்திலே சினிமாவில் குதித்து விட்டார் என்பதே.

அதன்படி இவர் குழந்தை நட்சத்திரமாக பிரபல நடிகர் பிரச்சனா நடிப்பில் கடந்த 2005ம் வெளியான கஸ்தூரிமான் என்னும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தற்போது அதற்கான புகைப்படங்கள் இணையத்தில் காட்டுததீயாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here