திருமண பந்தத்தில் இணையும் நடிகை சாய் பல்லவி – ரசிகர்கள் இடையே வேகமாக பரவும் தகவல்!!

0
saipallavi
திருமண பந்தத்தில் இணையும் நடிகை சாய் பல்லவி - ரசிகர்கள் இடையே வேகமாக பரவும் தகவல்!!

மலையாளத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் சினிமா உலகிற்குள் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. இவரின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் இவரை நன்கு கொண்டு போய் சேர்த்தது. அதை தொடர்ந்து மலையாளத்தில் சில படங்களில் நடித்து விட்டு தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.

மேலும் தமிழிழும் தனுஷின் மாரி 2, சூர்யாவின் NGK உள்ளிட்ட படங்களில் ஹீரோயின் ஆக நடித்தார். தற்போது டோலிவுட்டில் நல்ல திரைக்கதையை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் தனக்கு வரும் படவாய்ப்புகளை தொடர்ந்து ஏற்க மறுத்து வருகிறார் சாய் பல்லவி.

இது குறித்து அவரே பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது ‘டோலிவுட் ரசிகர்கள் மத்தியில் எனக்கு நல்ல பெயர் உள்ளது. சாய் பல்லவி என்றால், நல்ல கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பார் என்று நம்புகிறார்கள். அதனால், நல்ல கதைக்காக நான் காத்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார். ஆனால் சினிமா வட்டாரங்கள் சாய் பல்லவிக்கு விரைவில் திருமணம், எனவே தான் அவர் படங்களை நிராகரித்து வருகிறார் என பரப்பி வருகிறார்கள்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here