அலைபாயுதே ரேஞ்சுக்கு சேலையில் கவிபாடிய சாய் பல்லவி… வாயை பிளந்து ரசித்த இணையவாசிகள்!!!

0

தமிழ், மலையாளம் போன்ற மொழி சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. இவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். புடவையை காற்றில் பறக்கவிட்டு விதவிதமாக போஸ் கொடுத்து உள்ளார்.

சாய் பல்லவி அவர்களின் முதல் திரை அறிமுகம் மலையாள மொழி என்று தான் நாம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரின் முதல் திரை அறிமுகம் தமிழ் தான். அதாவது தமிழில் வெளியான கஸ்தூரி மான், தாம் தூம் என்ற படங்களில் கூட்டத்தில் ஒரு ஆளாக நடித்திருப்பார். அதன் பிறகுதான் அவர்  மலையாளத்தில் பட்டைய கிளப்பிய பிரேமம் என்ற படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார்.

அவரின் இந்த கதாபாத்திரம் பட்டி தொட்டி எங்கும் பரவியது. மேலும் இந்த படம் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ்,தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் புகழ் பெற்றது. இதன் மூலம் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வர தொடங்கியது. அந்த வகையில் மலையாளத்துக்கு பிறகு அவர் தெலுங்கில் துறையில் தடம் பதித்தார். அங்கும் அவரின் புகழ் கொடி கட்டி பறந்தது. அதன் பின்னர் தமிழில் கரு என்ற படத்தின் மூலம் வந்தார்.

முதல் படத்திலேயே அம்மா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். அதன் பின்னர் மாரி 2, என் ஜி கே உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்களில் இவரின் கதாபாத்திரம் அனைவரும் பேசும் வகையில் அமைய பெற்று இருக்கும். இதனால் குறுகிய நாட்களிலேயே அனைவர் மனதையும் தன் வசப்படுத்தி கொண்டார். மேலும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஆரஞ்சு நிற புடவையில் அலைபாயுதே படத்தில் இடம்பெற்ற பாடலில் வருவது போன்று சேலையை காற்றில் அங்கும் இங்கும் அசைத்து விதவிதமாக போஸ் கொடுத்து உள்ளார். தற்போது அவரின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் வாயை பிளக்க வைத்து உள்ளது. மேலும் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here