அப்படியே குழந்தை மாறியே மைண்டைன் பண்றீங்களே சாய்பல்லவி – இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்!!

0
sai

திரைப்பட நடிகை சாய்பல்லவி சினிமாவில் யதார்த்தமாக நடிக்கும் நடிகைகளில் ஒருவர். இதுவரை யாரும் பார்த்திராத சாய்பல்லவியின் குழந்தை புகைப்படத்தில் இப்போது இருப்பது போலவே காணப்படுகிறார் சாய்பல்லவி.

நடிகை சாய்பல்லவி

சினிமாவில் நடிக்கும் நாயகிகளில் அலட்டல், ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான நடிகை தான் சாய்பல்லவி. வருடத்திற்கு பல படங்கள் பண்ண வேண்டும், நடிகர்களுடன் டூயட் பாட வேண்டும் என்ற வகையில் இல்லாது சிறப்பான கதைகளை தேடி நடித்து வருபவர் சாய்பல்லவி. 15 ஆண்டுகளாக சினிமாத்துறையில் இருக்கும் சாய்பல்லவி நடித்துள்ள படங்களோ கொஞ்சம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த திரைப்படங்களில் இவர் பெற்றுள்ள விருதுகளோ அதிகம். குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள சாய்பல்லவி நடிகையாக அறிமுகமானது மலையாள சினிமாவில் தான். சாய்பல்லவி மலையாளத்தில் நடித்துள்ள ‘ப்ரேமம்’ திரைப்படம் தற்போது வரை ரசிகர்களின் பெஸ்ட் சாய்சாக இருந்து வருகிறது.

விஜய் சேதுபதியுடன் பைக் ரைடு போகும் குக் வித் கோமாளி புகழ் – வைரலாகும் ஷூட்டிங் புகைப்படம்!!

தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், தமிழ் மொழிகளில் உருவான சில சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார் சாய்பல்லவி. சமீபத்தில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சாய்பல்லவி நடிப்பில் வெளியான ‘பாவக்கதைகள்’ திரைப்படம் சாய்பல்லவியின் சிறந்த நடிப்பை பறைசாற்றும் வகையில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் சாய்பல்லவி கைவசம் ‘லவ் ஸ்டோரி’, ‘விரட்டாபர்வம்’, ‘ஷியாம் சிங்கா ராய்’ ஆகிய மூன்று படங்கள் உள்ளது. தென் இந்திய சினிமாவில் சிறந்த நடிகையாக இருந்து வரும் சாய்பல்லவி முன்னதாக ‘தாம்தூம்’ என்ற திரைப்படத்தில் நடிகை கங்கனாவுக்கு தங்கையாக நடித்திருப்பார்.

இப்போது எப்படி இருப்பாரோ அதே போல சாய்பல்லவி தன்னுடைய குழந்தை பருவத்தில் இருந்துள்ளார். குழந்தை முகம் கொண்ட சாய்பல்லவியின் பழைய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here