கோர விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் – சுயநினைவை இழந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

0

டோலிவுட்டில் மெகா ஸ்டாராக வளம் வருபவர் நடிகர் சாய் தரம் தேஜ். இவர் மோசமான பைக் விபத்தில் சிக்கி தற்போது சுயநினைவை இழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனேவே சென்ற ஆண்டில் இருந்தே திரையுலகம் கொரோனா, இயற்கை மரணம் என பல முன்னணி நட்சத்திரங்களை இழந்துள்ளது. தற்போது ரசிகர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி செய்தியாக தெலுங்கு மெகா ஸ்டார் நடிகர் சாய் தரம் தேஜ், தெலுங்கானா மாநிலத்தில் மாதாப்பூர் என்கிற இடத்தில் கேபிள் பாலத்தில் ஸ்போர்ட்ஸ் பைக்கில் சென்றுக்கொண்டு இருக்கும் போது மோசமான விபத்தில் சிக்கி உள்ளார்.

தற்போது அவர் விபத்து நடந்த இடத்திற்கு அருகில் உள்ள மெடிகோவர் என்ற மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் அவர் சுயநினைவை இழந்ததாக கூறப்படுகிறது.  விபத்து நடந்ததில் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக அவர் சுயநினைவை இழந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து நேற்று இரவு 8.30 மணி அளவில் ஏற்பட்டுள்ளது. போலீசார் தற்போது இது குறித்த தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த கோர விபத்தால் நடிகர் சாய் தரம் தேஜ் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here