யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்ட விஜய்  டிவி சீரியல் நடிகை…!உங்ககிட்ட இருந்து இத நாங்க எதிர்பாக்கல!!!

0

சின்னத்திரை சீரியல்கள் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் நடிகை சஹானா ஷெட்டி. அவரின் திருமணம் பற்றிய சில செய்திகள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது இவர் டாக்டர் அபிஷேக் என்பவரை திருமணம் செய்து கொண்டு உள்ளார். இந்த திருமண இரு  வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்ற திருமணம் தான். இருப்பினும் இது ரசிகர்களுக்கு தெரியாமல் நடைபெற்று உள்ளதால் அவர்களுக்கு ஏமாற்றத்தை தந்து உள்ளது .

அரூபம் படத்தின் மூலம் திரைக்கு வந்தவர் நடிகை சஹானா ஷெட்டி.  அதன் பிறகு  ஒரு சில படங்களில் துணை நடிகையாக தன்னுடைய திரைப் பயணத்தை தொடர்ந்தார். இந்நிலையில் அவருக்கு சின்னத்திரையில் வாய்ப்பு கிடைக்கவே அங்கும் தன் முத்திரையை படைத்தார். அந்த வகையில் அவருக்கு முதல் சீரியலாக அமைந்தது விஜய் டிவியின் பகல் நிலவு சீரியல்.

அதை தொடர்ந்து விஜய் டிவி, சன் டிவி என பல டிவி சீரியல்களில் நடித்து உள்ளார். அதாவது, சுந்தரி நீயும் சுந்தரன் நானும், அழகு, கண்ணான கண்ணே  உள்ளிட்ட சீரியல்களில் நடித்து உள்ளார். மேலும் இவர் ஒரு சில சீரியல்களில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவரின் திருமணம் பற்றிய செய்தி தற்போது இணையத்தில் காட்டுத் தீயாய் பரவுகிறது.

தன் கட்டுக்கோப்பான உடலின் ரகசியத்தை வெளியிட்ட பாரதி கண்ணம்மா அருண்… வைரலாகும் சாகச வீடியோ!!!

இது பற்றி அவரின் அம்மா கூறுகையில், இரு வீட்டாரின் சம்மதத்துடன் சஹானா ஷெட்டி மற்றும் அபிஷேக்கும் திருமணம் நடைபெற்றது உள்ளது. ஆடி மாதம் வர இருந்தால் திருமணத்தை எளிய முறையில் சீக்கிரமாக நடத்தி முடித்ததாக தெரிவித்து உள்ளார்.

மேலும் அவர்களின் வரவேற்பு வருகின்ற ஆகஸ்ட் 14ஆம் மாதம் மிக விமர்சையாக நடைபெற உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். மேலும்  இவர், கணவருடன் தேனிலவு சென்ற போது எடுத்துக்கொண்ட  புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனையடுத்து அவரின் திருமணம் பற்றிய தகவல் அறிந்த  ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திலும் வருத்தத்திலும் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here