விளையட்டுத் துறையின் மிக உயரிய விருது பெற்றார் சச்சின் டெண்டுல்கர்..! எதற்காக தெரியுமா..?

0

விளையாட்டுத் துறையின் உயரிய விருதாக கருதப்படும் லாரியஸ் விருது இந்திய முன்னாள் கிரிக்கெட் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டு உள்ளது. ஆண்டு தோறும் வழங்கப்படும் இந்த விருது இம்முறை சச்சினுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

இதற்கு முன்னர் யார் யார்??

2019ம் ஆண்டு வழங்கப்பட்ட லாரியஸ் விருதில் சிறந்த வீரருக்கான விருதை பிரபல கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி மற்றும் கார் ரேஸ் வீரர் ஹாமில்டனிற்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் 2020 முழு அட்டவணை – இனி நம்ம ஆட்டம் வெறித்தனமா இருக்கும்..!

எதற்காக சச்சினுக்கு??

2011ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்ற போது இந்திய அணி வீரர்கள் சச்சினை தோளில் சுமந்து கொண்டு மைதானத்தை வலம் வந்தனர். இதற்காக கடந்த 20 ஆண்டுகளில் விளையாட்டுத் துறையில் நடந்த சிறந்த நிகழ்வாக இது கருதப்பட்டு சச்சினுக்கு விருது வழங்கப்பட்டு உள்ளது.

2020ம் ஆண்டு லாரியஸ் விருதில் சிறந்த அணிக்கான விருதை தென் ஆப்பிரிக்க ரக்பி அணியும், சிறந்த வீராங்கனைக்கான விருதை அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சைமன் பைல்ஸ் ஆகியோரும் பெற்றனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here