புது அவதாரம் எடுக்கும் கிரிக்கெட் ஜாம்பவான்…!விளையாட்டு களத்தில் மட்டுமல்லாமல் சமையல் கட்டிலும் கலக்கும் சச்சின்!!!

0

கிரிக்கெட் உலகில் முடிசூடா மன்னனாக விளங்குபவர் சச்சின் டெண்டுல்கர். தற்போது இவர் புது அவதாரம் எடுத்து உள்ளார். அதாவது விளையாட்டு களத்தில் பட்டையை கிளப்பியவர் சச்சின். தற்போது சமையல் கட்டிலும் நுழைந்து உள்ளார். சமையல் அறையில் தான் சமைக்கும் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மும்பையை பிறப்பிடமாக கொண்டவர் சச்சின் டெண்டுல்கர் அவர்கள். இவர் இந்திய கிரிக்கெட் அணியின் மிக முக்கிய வீரர்களுள் ஒருவராவார். கிரிக்கெட் உலகில் இவரின் சாதனைகள் அளவில்லாதது. இவரின் திறமைக்கு ஏற்ப பல விருதுகளை பெற்று உள்ளார். மேலும் இவர் முதன் முதலில் விளையாடிய போட்டியிலேயே சதம் அடித்தவர். மேலும் இவர் சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ரன்கள்  எடுத்தவர் என்ற சாதனையை படைத்தது உள்ளார்.

மேலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் IPL போட்டிகளில் மும்பை அணியின் கேப்டனாகவும் இவர் இருந்து உள்ளார். IPL போட்டிகளிலும் இவன் சாதனைகள் பல. இத்தகைய பல சாதனைகளை படைத்து கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக விளங்குகிறார் சச்சின் டெண்டுல்கர். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தான் சமையல் செய்யும் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். மேலும் அந்த பதிவில் தான் சமைப்பது என்ன என்று கண்டுபிடிக்குமாறு பதிவிட்டு உள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sachin Tendulkar (@sachintendulkar)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here