Friday, April 19, 2024

“பலர் எனக்கு எதிராக மேலிடத்தில் நஞ்சினை விதைக்கின்றனர்” – சச்சின் விளாசல்..!

Must Read

எந்த சூழ்நிலையிலும் நான் பாரதிய ஜனதா கட்சியில் இணைய மாட்டேன் என்று காங்கிரஸ் பொறுப்பில் இருந்த சச்சின் பைலட் கூறியுள்ளார்.

மோதல்:

கடந்த சில நாட்களுக்கு முன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டிற்கும் அந்த மாநிலத்தின் துன்னை முதல்வராக இருந்த சச்சின், ஆகிய இருவருக்கும் பகிரங்கமாக மோதல் நடந்தது. இதனால், அங்கு பல குழப்பங்கள் நடந்தது. சச்சின் தனக்கு பலர் ஆதரவு இருக்கிறது என்று கூறி காங்கிரஸ் சட்ட மன்ற கூட்டத்தை புறக்கணித்தார்.

Sachin Pilot - Ashok Gehlot
Sachin Pilot – Ashok Gehlot
மந்திரி சபையிலிருந்து நீக்கம்:

பல உத்தரவுகள் மேல் இடத்தில் இருந்து பிறப்பிக்க பட்டும் சச்சின் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால் சச்சின் மற்றும் ஆதரவு தெரிவித்த 2 மாதிரிகள் அனைவரையும் கட்சி மந்திரி சபையில் இருந்து நீக்கியது. அத்துடன், அவரது காங்கிரஸ் தலைவர் பதிவில் இருந்து அவரை நீக்கியத்துடன், கோவிந்த் சிங் நியமிக்கப்பட்டார்.

Sachin Pilot - Ashok Gehlot - Rahul Gandhi
Sachin Pilot – Ashok Gehlot – Rahul Gandhi

இவருக்காக பிரியங்கா, ராகுல் காந்தி மற்றும் பா. சிதம்பரம் ஆகியோர் சென்று பேசியும் சச்சின் தனது பிடியில் இருந்து சற்றும் விலகவில்லை.

அடுத்ததாக..:

தற்போது, இவரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று கட்சி தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த சூழலை பயன்படுத்தி பாஜக தலைவர்கள் அவர் தங்கள் கட்சிக்கு வந்தால் வரவேற்பதாக கூறினர்.

சச்சின் பதிலடி:
Sachin Pilot
Sachin Pilot

ஆனால், இதற்கு சச்சின் பதில் அளித்து உள்ளதாவது ” நான் எந்த சூழ்நிலையிலும் பாரதிய ஜனதா கட்சியில் சேர மாட்டேன். சிலர் தலைமை பொறுப்புகளில் உள்ளவர்களிடம் என்னை பற்றி தவறாக நஞ்சை அவர்கள் மனதில் விதைக்கின்றனர். அதனால் தான் அவர்கள் போக்கில் நான் பாரதிய ஜனதா கட்சியில் சேர இருப்பதாக கூறுகின்றனர்.” என்று தனக்கு எதிரானவர்களுக்கு பதிலடி கொடுத்து உள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -