சபரிமலையில் 50 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு அனுமதி கிடையாது – மீண்டும் வெடித்த சர்ச்சை!!

0
PTI11_16_2018_000138B

சபரிமலையில் 50 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு அனுமதி கிடையாது என்று கேரள போலீஸ் இணையதளம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அது குறித்து கோர்ட் கேள்வி எழுப்பினால் நாங்கள் பதில் கூறுவோம் என்று தேவஸ்தான போர்டு கூறியுள்ளது.

பெண்களுக்கு அனுமதி இல்லை:

கேரளாவில் உள்ள மிகவும் புகழ் பெற்ற கோவிலான சபரிமலையில் 50 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு தரிசனம் செய்யவோ, கோவிலுக்குள் நுழையவோ அனுமதி கிடையாது. இது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் வழிமுறை ஆகும். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் கோவிலுக்குள் நுழையலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க கேரளா அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால், பல இந்து அமைப்புகள் எதிர்த்தன. கலவரம் வெடித்ததால் எந்த பெண்களும் அப்போது கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. இதனை அடுத்து கொரோனா பரவல் காரணமாக கோவில்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டது.

சர்ச்சைக்குரிய வாசகம்:

மீண்டும் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் பின்பற்றபட்டு வந்ததால், கோவில்கள் திறக்க அனுமதிக்கப்பட்டது. கடந்த 16 ஆம் தேதி முதல் தரிசனத்திற்காக முன்பதிவுகள் ஆரம்பித்து விட்டன. கூடுதல் பக்தர்களின் வருகைக்காக முன்பதிவுகள் 2 ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டன. இப்படியான சூழலில் கேரளா போலீசார் நிர்வகித்து வரும் இணையத்தளத்தில் சபரிமலையில் 50 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு அனுமதி கிடையாது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அரியர் தேர்வுகள் கண்டிப்பாக நடத்தப்படும்!!

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தேவஸ்தான போர்டு தலைவர் வாசு கூறுகையில், “50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் உள்நுழைவது ஒரு பிரச்னை அல்ல. ஆனால், நாங்கள் சபரிமலையில் அமைதி நிலவ வேண்டுகிறோம். அதே போல் பக்தர்களின் பிரச்சனைகளை தீர்க்கும் கடமையும் எங்களுக்கு உள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டால் நாங்கள் பதில் அளித்துக் கொள்வோம்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here