சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு.,, மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!!

0
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு.,, மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!!
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு.,, மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாராகவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் திவ்யா தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் :

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடம் தோறும் கார்த்திகை, மார்கழி மாதத்தில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை நடைபெறும். இதையொட்டி பக்தர்கள் மாலை அணிந்து, 41 நாட்கள் விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க செல்வார்கள். இந்நிலையில் இன்று மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை முதல் சபரிமலை யாத்திரைக்கு வரும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டியவைகள் குறித்து பத்தினம்திட்டா மாவட்ட ஆட்சியர் திவ்யா பேட்டி கொடுத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதில் சபரிமலை யாத்திரைக்காக தமிழ்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் அனைத்து பக்தர்களையும் மனதார வரவேற்கிறேன். மேலும் கொரோனா காரணமாக கடந்த 3 வருடங்களில் சபரிமலை யாத்திரைக்கு வந்த பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த ஆண்டு நிலைமை சரியாகி உள்ளதால் அவை விளக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் நடப்பு வருட மகர விளக்கு பூஜையை மன நிறைவோடு எந்த ஒரு கட்டுப்பாடு இல்லாமல் நடத்த 20 துறைகள் பணியாற்ற உள்ளன.

மேலும் பக்தர்கள் வசதிக்காக பல முன்னேற்பாடுகள், வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்கு ஆன்லைனில் புக் செய்துவிட்டு வரலாம். அப்படி முடியவில்லை என்றால் கேரளாவில் வந்து ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டான்ட் உள்ளிட்ட 12 இடங்களில் டிக்கெட் புக் செய்வதற்கு கவுண்டர்கள் வைக்கப்பட்டு உள்ளது .மேலும் சபரிமலையில் தூய்மை பணிகளை மேற்கொள்ள 1000 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.ஆஹா…, புகழ் நீ பலே ஆளுயா.., கல்யாணம் ஆகி கொஞ்ச நாளிலே மனைவிய இப்படி ஆகிட்டியே!!

இதையடுத்து பக்தர்களும் பணியில் இருக்கும் போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் பக்தர்கள் பிளாஸ்டிக் உபயோகப்படுத்த வேண்டாம். அடுத்து வயதானவர்களுக்கும், உடம்பு சரி இல்லாதவர்களுக்கும் தேவையான மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here