சபரிமலை கோவிலுக்கு ரயில் பாதை அமைக்கும் பணி., இந்த வழித்தடத்தில் தான்? ரயில்வே அமைச்சர் அறிவிப்பு!!!

0
சபரிமலை கோவிலுக்கு ரயில் பாதை அமைக்கும் பணி., இந்த வழித்தடத்தில் தான்? ரயில்வே அமைச்சர் அறிவிப்பு!!!

கேரளாவில் உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பக்தர்கள் சபரிமலைக்கு எளிதாக சென்று வர ரயில் போக்குவரத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால் கேரள அரசு நிலம் கையகப்படுத்துவதில், பல ஆண்டுகளாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என மக்களவையில் ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து 2 மாற்று வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி செங்கனூர் to பம்பை வரையிலான ரயில் பாதை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. சரியான வழித்தடத்தை தேர்வு செய்த பின், அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்படும் எனவும் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டுள்ளார்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம்.. கூடுதலாக இந்த மருத்துவமனைகள் இணைப்பு? மாஸ் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here