பங்குனி மாத சிறப்பு பூஜை – சபரிமலை நடை நாளை திறப்பு!!

0

பங்குனி மாத சிறப்பு பூஜை காரணமாக நாளை மாலை 5 மணி அளவில் சபரிமலை நடை திறக்கப்படவுள்ளது. மேலும் தக்க பாதுகாப்புடன் பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளார்.

சபரிமலை:

கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா பரவல் குறைந்ததால் கோவில் போன்ற புனித ஸ்தலங்கள் திறக்கப்பட்டது. பக்தர்களை அளவோடு கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது அந்த வகையில் தமிழ் மாதம் தோறும் சபரி மலையில் சிறப்பு பூஜை நடைபெரும். தற்போது அந்த வகையில் பங்குனி மாத சிறப்பு பூஜை 5 நாட்கள் நடக்கவுள்ளது. இதனை முன்னிட்டு நாளை மாலை 5 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்படவுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மாத பூஜையின் தொடர்ச்சியாக வரும் 19-ந் தேதி அன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா தொடங்குகிறது. இதனை தொடர்ந்து வருகிற 27ம் தேதி அன்று இரவு சரம் குத்தியில் பள்ளி வேட்டை நடைபெறும். மேலும் அதக்ரு அடுத்த நாள் 28ம் தேதி காலை பம்பையில் ஆறாட்டு நடைபெறும். இதனை தொடர்ந்து அன்று மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும். அன்று இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

பெட்ரோல் விலை குறைப்பு & நகைக்கடன் தள்ளுபடி – தெறிக்கவிடும் திமுக தேர்தல் வாக்குறுதிகள்!!

தற்போது மாத பூஜை மற்றும் விழாக்களுக்கு வருகிற 15ம் தேதி முதல் 28ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 10,000 பக்தர்களை அனுமதிக்கவுள்ளனர். இதற்காக பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யவேண்டும். அதுமட்டுமல்லாமல் பக்தர்கள் அனைவரும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை நடத்தி கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்த பின்னரே கோவிலுக்கு வரவேண்டும். மேலும் அந்த சான்றிதழை கொண்டு வரவும் அறிவுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here