மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் தளங்களில் ஒன்றான சபரிமலை ஐயப்பன் கோவிலில், ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெறும், இரண்டு மாதங்கள் நடைபெறும் இந்த பூஜை தினங்களில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மட்டுமல்லாமல் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் அனுதினமும் வருகை தருவார்கள். இந்த நிலையில் நவம்பர் 16ஆம் தேதி மாலை முதல் மண்டல பூஜைக்காக சபரிமலையில் நடை திறக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
மதுரை மக்களே…, மதுரையில் கைநிறைய சம்பளத்துடன் வேலை வாய்ப்பு…, முன்னணி நிறுவனம் அழைப்பு!!
இதையடுத்து சென்னை to நெல்லை சிறப்பு வந்தே பாரத் சிறப்பு ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி நவம்பர் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 28 தேதி வரை வியாழக்கிழமைகளில் மட்டும் காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் இந்த ரயில் மதியம் 2.15க்கு நெல்லை வந்தடையும். மறுமார்க்கமாக மதியம் 3 மணிக்கு நெல்லையில் இருந்து கிளம்பி இரவு 11.15க்கு சென்னை எக்மோர் வந்தடையும் என தெரிவித்துள்ளனர்.