‘இந்தியாவுடனான HONEYMOON முடிந்து விட்டது’  – ட்ராவிட்டை வெளுத்து வாங்கிய முன்னாள் வீரர்!!

0
இந்தியாவுடனான HONEYMOON முடித்த ட்ராவிட்.., வெளுத்து வாங்கிய முன்னாள் வீரர்!!
இந்தியாவுடனான HONEYMOON முடித்த ட்ராவிட்.., வெளுத்து வாங்கிய முன்னாள் வீரர்!!

இந்திய அணி பயிற்சியாளரின் காலம் முடிந்து விட்டது என்றும், இனிமேல் அவருக்கு அவகாசம் கொடுக்க முடியாது என்றும் முன்னாள் வீரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சாபா கரீம் கடும் விளாசல்!!

ஆசிய கோப்பை தொடரில் இருந்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெளியேறியது. இதில் இந்திய அணி லீக் சுற்றில் சிறப்பாக விளையாடிய போது சூப்பர் 4 சுற்றில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வெளியேறியது. ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஒவ்வொரு வீரர்களையும் திறமையான முறையில் தேர்வு செய்தும் ஏன் தோல்வி அடைந்தது என பல ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. அதற்கு காரணம் அணி பலமாக இருந்த போதிலும், ப்ளேயிங் 11ல் வீரர்கள் சரியான முறையில் களமிறங்கவில்லை. இதற்கு காரணம் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தான் என பலரும் கூறி வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சாபா கரீம் ராகுல் டிராவிட் மீது கடும் விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது அவரது பயிற்சி காலங்கள் முடிவடைந்து விட்டது (இந்திய அணியில் தனது தேனிலவு காலங்கள் முடிவடைந்து விட்டது) என்றும், அதில் ராகுல் இந்திய அணியை சிறப்பாக வெற்றி அடைய செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் இந்திய அணி வெள்ளை பந்து கிரிக்கெட் தொடரில் தொடர் வெற்றிகளை சந்தித்தது.

 

ஆனால் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற சிவப்பு பந்து தொடரில் மட்டும் ஏன் கடுமையான தோல்வியை சந்திக்க வேண்டும். இதற்கு ராகுல் டிராவிட் சிறந்த பயிற்சி கொடுக்கவில்லை என்று தான் அர்த்தம். மேலும் முக்கியமான ஐசிசி தொடர்களையே வெல்ல முடியவில்லை என்றால் அவர் பயிற்சியாளராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் அவருக்கு டி20 உலக கோப்பையில் வாய்ப்பு கொடுத்து இந்திய அணி நிர்வாகம் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என சாபா கரீம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் T20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு யார் பயிற்சியாளராக வர போகிறார் என தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here