விராட் கோலி, ரோஹித் இருவருக்கும் ஐபிஎல் தான் இறுதியா?? சபா கரீம் வெளிப்படையான கருத்து!!

0
விராட் கோலி, ரோஹித் இருவருக்கும் ஐபிஎல் தான் இறுதியா?? சபா கரீம் வெளிப்படையான கருத்து!!
விராட் கோலி, ரோஹித் இருவருக்கும் ஐபிஎல் தான் இறுதியா?? சபா கரீம் வெளிப்படையான கருத்து!!

T20 போட்டிகளில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் எதிர்காலம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சபா கரீம் முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

சபா கரீம்:

இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி, இனி சர்வதேச டி20 போட்டிக்கான அணியில் இடம் பெற மாட்டார்கள் என பரவலான தகவல் வெளியாகி வருகிறது. இதற்கு ஏற்றார் போல தான், இந்த இரு வீரர்களும், இலங்கை அணிக்கு டி20 தொடரில் இடம் பெறவில்லை. மேலும், ரோஹித் சர்மாவும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கு மட்டுமே கேப்டனாக இருப்பார் என பிசிசிஐ அறிவித்திருந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனால், இனி வரும் டி20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியை வழி நடத்துவார் என்ற தகவலும் பரவி வருகின்றன. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சபா கரீம், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் எதிர்கால டி20 போட்டி குறித்து சில கருத்துக்களை கூறியுள்ளார்.

50 ஓவர் உலக கோப்பைக்கு தகுதி பெற முன்னிலை இருக்கும் அணிகள் இதுதான்…, முழு விவரம் உள்ளே!!

அவர் கூறியதாவது, விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செய்யப்பட்டால், சர்வதேச டி20 போட்டிக்கான இந்திய அணி தேர்வில் இவர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என தெரிவித்துள்ளார். மேலும், தற்போதைய டி20 அணியில் இவர்களை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here