ஸ்பைடர் மேன்னையும் ஆட வைத்த புஷ்பா பட பாடல் – இணையதளத்தில் வைரலாகும் வீடியோ!!

0

அண்மையில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ”சாமி சாமி” என்ற பாடலுக்கு நடனமாடியிருப்பார். பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி மகிழ்ந்து வரும் நிலையில் தற்போது ஸ்பைடர் மேன்னும் ராஷ்மிகா ஸ்டைலில் குத்தாட்டம் போட்டுள்ளார்.

புஷ்பா:

சுகுமார் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட ”புஷ்பா” திரைப்படம் 17, டிசம்பர் 2021 அன்று திரையரங்கங்களில் வெளியானது. இந்த திரைப்படத்தின் கதையை விட இந்த திரைப்படத்தில் அமைந்துள்ள இரண்டு பாடல்களுக்கே அதிகமான வரவேற்பு கிடைத்தது. இந்த திரைப்படத்தில் அமைந்துள்ள ”ஓ சொல்றியா” பாடலுக்கு இணையாக ”சாமி சாமி” பாடலும் படு ஹிட் ஆனது. சாமி சாமி பாடலுக்கு ராஷ்மிகா மந்தனா புதுவிதமான ஸ்டைலில் நடனமாடியிருப்பார்.

பலரும் அந்த பாடலுக்கு அதே போல நடனமாடி சமூக வலை பக்கங்களில் பகிர்ந்து வந்தனர். தற்போது சாமி சாமி பாடலுக்கு ஸ்பைடர் மேன் நடனமாடுவது போல ஒரு வீடியோ இன்டர்நெட்டில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை பிரபல தெலுங்கு நடிகர் மற்றும் அல்லு அர்ஜுனின் தம்பியான அல்லு சிரிஷ் தனது டிவீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here