சாமை அரிசியில் சுவையான சிக்கன் பிரியாணி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0

சாமை அரிசியில் அதிக நார் சத்துக்கள் இருப்பதால் அது உடலுக்கு முழு பலத்தையும் அளிக்க வல்லது. ஆனால் தற்போது உள்ள தலைமுறையினருக்கு சாமை அரிசி என்றாலே என்னவென்றே தெரியாது. இப்பொழுது அந்த சாமை அரிசியை வைத்து சுவையான சிக்கன் பிரியாணி எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

சாமை அரிசி – 500 கி

சிக்கன் – 1/2 கி

வெங்காயம் – 100 கி

தக்காளி – 100 கி

இஞ்சி பூண்டு விழுது

சோம்பு, பட்டை,

தயிர்

புதினா

எலுமிச்சை சாறு

மஞ்சள் தூள்

மிளகாய் தூள்

உப்பு

தாளிக்க

நெய்

கிராம்பு

ஏலக்காய், பிரிஞ்சி, இல்லை

பட்டை,

செய்முறை

சிக்கனை நன்கு சுத்தப்படுத்தி எடுத்து கொள்ளவேண்டும். பின்னர் அதனுடன் உப்பு, மஞ்சள் தூள்,எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கி சுமார் 10 நிமிடங்களில் ஊற விடவும். பின்னர் நெய்யை நன்கு சூடாக்கி தாளிக்க எடுத்து வைத்திருக்கும் பொருட்களை சிவக்க வறுத்து எடுக்க வேண்டும்.

vegetable biriyani
vegetable biriyani

இப்பொழுது அதனுடன் சோம்பு, பட்டை சேர்த்து இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து நன்கு வதக்கவும். மேலும் நறுக்கிய வெங்காயத்தையும் அதனுடன் சேர்த்து வதக்கவும். அதன் பின் தக்காளி மற்றும் புதினாவை சேர்த்து நன்கு சுருளும் அளவிற்கு வதக்கவும்.

இப்பொழுது ஊறவைத்த சிக்கனை அதில் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி கழுவி வைத்த சாமை அரிசியை அதில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். 4 விசில் வந்ததும் இறக்கி பரிமாறினால் சுவையான சாமை அரிசி சிக்கன் பிரியாணி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here