கொரோனாவிற்கான 2வது தடுப்பூசி – ரஷ்யா அக்.15 இல் அறிமுகம்!!

0
corona vaccine

‘ஸ்பூட்னிக் வி’ என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான உலகின் முதல் தடுப்பூசியை ஏற்கனவே பதிவு செய்துள்ள ரஷ்யா, இப்போது அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் இரண்டாவது தடுப்பூசியை பதிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தடுப்பூசி சோதனையில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ரஷ்யா 2வது தடுப்பூசியை அறிமுகம் செய்ய உள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

கொரோனா தடுப்பூசி:

2019ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக அனைத்து நாடுகளுக்கும் பரவியது. இதனால் உலகம் முழுவதும் இதுவரை 9.8 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளனர். கொரோனாவிற்கு எதிராக முறையான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை மாஸ்க், தனிமனித இடைவெளி போன்றவற்றை பின்பற்ற வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. தடுப்பூசியை கண்டறியும் நாடு தான் உலக பொருளாதாரத்தை தீர்மானிக்கும் நாடக உருவெடுக்கும் என்பதால் தீவிர ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

‘ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

Vlamidir Putin

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘கோவாக்சின்’ தடுப்பூசி மனித பரிசோதனைகள் நடந்து வருகின்றன. துரதிஷ்டவசமாக ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சில பக்கவிளைவுகளை ஏற்படுத்திய காரணத்தால் அதன் சோதனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ரஷ்யா ‘ஸ்பூட்னிக் வி’ எனும் உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்தது. இதன் நம்பகத்தன்மைக்காக அதிபர் புதின் தனது மகளுக்கு அதனை செலுத்தி பரிசோதித்ததாக தெரிவித்தார். மேலும் 10க்கும் மேற்பட்ட நாடுகள் ரஷ்யா கொரோனா தடுப்பூசியை பெற ஒப்பந்தம் செய்துள்ளன.

சீனாவில் தீவிரமாக பரவும் புதிய பாக்டீரியா காய்ச்சல் – அச்சத்தில் உலக நாடுகள்!!

russia announces and register new corona virus vaccine
new corona virus vaccine

இந்நிலையில் சைபீரியாவின் வெக்டர் நிறுவனம் உருவாக்கியதாகக் கூறப்படும் இரண்டாவது கொரோனா தடுப்பூசிக்கு ‘எபிவாகொரோனா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் மனித பரிசோதனைகள் முடிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது வரும் அக்டோபர் 15ம் தேதிக்குள் பதிவு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here