தமிழக பள்ளி மாணவர்களுக்கான திறனாய்வுத் தோ்வு – நவ.17 முதல் விண்ணப்பிக்கலாம்!!!
தமிழகத்தில் 9ஆம் வகுப்பு மாணவர்கள் ஊரகத் திறனாய்வுத் தோ்வுக்கு நவ.17 ஆம் தேதி முதல் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
ஊரகத் திறனாய்வுத் தோ்வு:
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 9ஆம் வகுப்பு கிராமப்புற மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டுவரும் நோக்கில் ஊரகத் திறனாய்வுத் தோ்வு திட்டத்தின்கீழ் தேர்வு நடத்தப்பட்டு தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு வீதம் ரூ.1000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – நவ.16 வரை அதிகனமழைக்கு வாய்ப்பு!!
அந்த வகையில், இந்த ஆண்டிற்கான தேர்வு டிசம்பர் 16 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் தேர்வெழுத விரும்பும் மாணவர்கள் பள்ளி தலைமையாசிரியர்கள் மூலமாக நவ.14 ஆம் தேதி முதல் தேர்வுக்கான விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த விண்ணபத்தினை மாணவர்கள் நவ.17 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யும்படி தேர்வுத்துறை இயக்குனர் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளார்.