Friday, March 29, 2024

தமிழகத்தில் அக். 1 முதல் பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

Must Read

தமிழக அரசு பள்ளிகளை திறக்க அனுமதி அளித்ததை அடுத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்னென்ன விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

கொரோனா பரவல்:

கடந்த மார்ச் மாதம் கொரோனா நோய் பரவல் காரணமாக இந்திய அரசு பொது முடக்கத்தினை அமல்படுத்தியது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. தொடர்ந்து பொது முடக்கம் பல தளர்வுகளுடன் பின்பற்றப்பட்டு வருகிறது. தற்போது தமிழக அரசு மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம் என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்களிடம் பாடம் சம்பந்தமான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள சுய விருப்பத்தின் பெயரில் வரலாம் என்று கூறப்பட்டது. தற்போது பள்ளிக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

நெறிமுறைகள்:

50 சதவீத ஆசிரியர்கள் மட்டும் தான் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்படுவர். குழுக்களை சேர்ந்தவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவர்.

‘பாடும் நிலா’ எஸ்பி பாலசுப்ரமணியம் காலமானார் – சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

முதல் குழுவினை சேர்ந்த மாணவர்கள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் பள்ளிக்கு வர வேண்டும். அடுத்த குழுவை சேர்ந்த மாணவர்கள் செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் பள்ளிக்கு வர வேண்டும். ஆசிரியர்களுக்கும் இதே நெறிமுறைகள் தான்.

பள்ளி நிர்வாகங்கள் செய்ய வேண்டியது:

  • மாணவர்கள் அனைவரும் 6 அடி இடைவெளி விட்டு தான் வகுப்பறையில் அமர்ந்திருக்கின்றனர் என்பதனை அவ்வப்போது உறுதி செய்ய வேண்டும்.
  • பள்ளிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
  • ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் போதிய இடைவெளியை பின்பற்றி தான் உரையாடுகின்றனரா?? என்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • வகுப்பறைக்கு வெளியே மாணவர்கள் சுற்றி திரிவதை ஒரு போதும் ஊக்குவிக்க கூடாது.
  • அவர்களுக்கு கொரோனா நோய் பரவல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

ஆசிரியர்கள் செய்ய வேண்டியது:

  • மாணவர்கள் தங்களது முகம் மற்றும் பிற பகுதிகளை தொடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
  • அவர்களை சானிடைசர் மற்றும் முகக்கவசங்களை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.
  • பள்ளியில் உள்ள உபகரணங்களை முடிந்தவரை தொடுவதை தவிர்க்க கற்றுக் கொடுக்க வேண்டும்.
  • மாணவர்களின் உடல் நலன் மற்றும் ஆரோக்கியத்தை அவ்வப்போது உறுதி செய்தும் கண்காணித்து கொண்டும் இருக்க வேண்டும்.

அவ்வப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

100 நாள் வேலை திட்டம்.., இனி தினக்கூலியாக 400 ரூபாய் வழங்கப்படும்? வெளியான அதிரடி அறிவிப்பு!!!

நாடு முழுவதும் அனைத்து கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் கடந்த 2006 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -