கொரோனா தடுப்பு பணிக்காக சென்னையில் ரூ. 400 கோடி செலவு – மாநகராட்சி கமிஷனர்..!

0

சென்னையில் மட்டும் கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.400 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ்..!

சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, சென்னையில் கொரோனா தடுப்புப் பணிக்காக சுமார் ரூ.400 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் கொரோனா பரிசோதனைக்கு ரூ.200 கோடியும், களப்பணியாளர்களுக்கு உணவு வழங்க ரூ.30 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. சென்னையில் 90 சதவீத மக்கள் மட்டுமே மாஸ்க் அணிகின்றனர். ஆனால் இதுமட்டும் போதாது. அனைத்து மக்களும் மாஸ்க் அணிய வேண்டும் என்பதுதான் மாநகராட்சியின் நோக்கமாகும்.

chennai-corp-commissioner
chennai-corp-commissioner

மேலும் சென்னையில் மட்டும் இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிகளவு பரிசோதனை செய்வதால் அதில் வரக்கூடிய தரவுகள் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நாணயத்தை விழுங்கிய சிறுவன்- அடுத்து என்ன நடந்தது தெரியுமா??

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. சென்னையில் இதுவரை 83,377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 67,077 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 1,376 பேர் உயிரிழந்துள்ளனர். 14,923 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். மொத்த பாதிப்பில் 58.34 சதவீதம் ஆண்களும், 41.66 சதவீதம் பெண்களும் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here