வங்கிகளில் ரூ. 2000 நோட்டுகளை மாற்ற இது கட்டாயம் தேவை…, RBI யின் அறிவிப்பால் மக்கள் ஏமாற்றம்!!

0
வங்கிகளில் ரூ. 2000 நோட்டுகளை மாற்ற இது கட்டாயம் தேவை..., RBI யின் அறிவிப்பால் மக்கள் ஏமாற்றம்!!
வங்கிகளில் ரூ. 2000 நோட்டுகளை மாற்ற இது கட்டாயம் தேவை..., RBI யின் அறிவிப்பால் மக்கள் ஏமாற்றம்!!

இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) கடந்த மே 19ம் தேதி புழக்கத்தில் உள்ள ரூ. 2000 நோட்டுகளை திரும்ப பெற இருப்பதாக அறிவித்திருந்தது. இதனால், இனி ரிசர்வ் வங்கி உட்பட மற்ற வங்கிகளில் இருந்தும் ரூ. 2000 நோட்டுகளை வெளியிடப்படாது எனவும் அறிவித்தது. மேலும், மக்கள் கைகளில் உள்ள ரூ. 2000 நோட்டுகளை மாற்றுவதற்கான வழி முறைகளையும் RBI உடனுக்குடன் தெரிவித்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதன்படி, நேற்று (மே 23) முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் மக்கள் எந்த ஆவணங்களையும் காட்டாமல் ரூ. 2000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என கூறியிருந்தது. இதையடுத்து, மக்கள் தங்கள் கையில் வைத்துள்ள 2000 நோட்டுகளை மாற்ற எத்தகைய ஆவணங்களும் எடுத்து வராமல் வங்கிகளில் திரண்டனர். இவர்களில், வங்கியில் கணக்கு வைத்திருப்போரை தவிர்த்து மற்றவர்கள் இந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.., சூப்பர் மார்க்கெட்டில் இனி இது தேவையில்லை – வெளியான அதிரடி உத்தரவு!!

அதாவது, RBI யானது வங்கிகளில் கணக்கு வைத்திருப்போரை தவிர்த்து, மாற்றவர்களிடம் KYC ஆவணங்களை சரிபார்த்து ரூ. 2000 நோட்டுகளை மாற்ற அறிவுறுத்தி உள்ளது. ஆனால், இது குறித்த வெளிப்படை தன்மை மற்றும் எந்த ஒரு அறிவிப்பு இல்லாத மக்கள் சிலர் ரூ. 2000 நோட்டுகளை மாற்ற, எந்த ஒரு ஆவணமும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர். KYC ஆவணங்கள் என்பது, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, ஆதார் கார்டு, NREGA வழங்கிய வேலை அட்டை மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டால் வழங்கப்பட்ட கடிதம் ஆகியவை ஆகும். இது குறித்து அறிந்த மக்களுக்கு, ரூ. 2000 மாற்றுவது பெறும் ஏமாற்றமாக இருந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here